Monday, February 1, 2010


ஆடு மேய்ப்பவனிடம் ஆடுகள் ஒருமுறை சென்று தங்கள் குறையை முறையிட்டன. ""நாங்கள் உங்களுக்குப் பால் தருகிறோம். கம்பளி செய்ய நூல் தருகிறோம். எல்லாம் செய்தும் எங்களை நீங்கள் சரியாகக் கவனிப்பதில்லை. உணவு கூட நாங்களே தான் போய் மேய்ந்து தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், உங்களுக்கு இவை எதுவுமே தராத நாய்களை நீங்கள் ரொம்பத்தான் கொஞ்சுறீங்க. உங்கள் தட்டிலிருந்தே கூட சில சமயம் உணவு கொடுக்கிறீர்கள்... இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல!'' என்று முறையிட்டன.இதைக் கேட்ட வண்ணம் வந்த நாய் ஒன்று, ""நீ சொல்வது சரிதான். ஆனால், நாங்கள் இல்லையென்றால் என்னவாகும்? உங்களைத் திருடர்கள் திருடிக் கொண்டு ஓடுவர். ஓநாய்கள் திருடிக் கொண்டு ஓடும். நீங்கள் பயமின்றி புல் கூடத் தின்ன முடியாது... அதனால்தான் எங்களுக்கு இந்த விசேஷித்த கவனிப்பு!'' என்றது நாய். ஆடுகளும் அதில் இருந்த உண்மையை ஒப்புக் கொண்டு தங்கள் குறையை மறந்தன

No comments:

Post a Comment