Monday, February 1, 2010


விஞ்ஞானிகள் எப்பவும் தங்களது ஆராய்ச்சி பற்றிய நினைப்பிலேயே இருப்பர். மனைவி, குடும்பம் எதுவுமே அவர்களது ஞாபகத்தில் இருக்காதுஒருமுறை பாஸ்டன் நகர் பெண்கள் பள்ளிக்கூடத்தில் சொற்பொழிவாற்ற ஒப்புக் கொண்டிருந்தார் தாமஸ் ஆல்வா எடிசன். குறித்த நேரத்தில் அவர் வந்து சேராததைக் கண்ட பள்ளி நிர்வாகி மற்றும் விழாக்குழு ஆசிரியர்கள் எடிசனைத் தேடிப் புறப்பட்டனர்.பல இடங்களில் தேடி சலிப்படைந்த வேளையில் கடைசியாக நண்பரின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார் எடிசன். எடிசனை அணுகி விழாவிற்கு அழைத்தபோது...""அடடே.. மறந்தே போய்விட்டேன்... இதோ வர்றேன்,'' என்று அப்படியே புறப்பட்டார். மின்சக்தி பற்றி மிகவும் அற்புதமாகப் பேசினார்.பாராட்டி கரகோசம் எழுப்பிய அதே நேரத்தில் எடிசன் அணிந்திருந்த கசங்கிய ஆடைகளைப் பார்த்தனர்.""அய்யா! விழாவிற்கு நல்ல ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கக் கூடாதா?'' என்று ஒருவர் கேட்டார்.""அது என்னோட தவறில்லை... என்னை அழைத்தவர்கள் இந்த விஷயத்தை எனக்கு முன்பே நினைவுபடுத்தியிருக்க வேண்டாமா?'' என்றார்.மற்றொரு நாள்—வாழ்வின் முக்கியமான கட்டத்தையே மறந்து விட்டார்.புத்தாடை புனைந்து மேக்கப்புடன் அழகாகக் காணப்பட்ட எடிசன் ஒரு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் விழுந்தடித்து ஓடிவந்தார்.""என்னப்பா... இப்படி ஓடிவந்திருக்கே?'' என்று கேட்டார் எடிசன்.""சர்ச்சிலே எல்லாரும் உனக்காகக் காத்திருக்கிறாங்க... உன்னைக் கையோடு கூட்டிட்டு வரச் சொன்னாங்க,'' என்றார்.""எதுக்காக எல்லாரும் எனக்காகக் காத்திருக்கின்றனர்?'' புரியாது கேட்டார் எடிசன்."இன்னைக்கு உனக்குத் திருமணம்... மணப்பெண் காத்திருக்காங்க. வா... சீக்கிரமாய் போவோம்,'' என்று அழைத்தார்.""எனக்குத் திருமணமா?'' என்று கேட்டவர் தனக்குத்தானே பார்த்துக் கொண்டார். புத்தாடை அணிந்திருப்பது தெரிந்தது.""ஆமா... அதுக்குத்தான் புது டிரெஸ் மாட்டியிருக்கேனா? எனக்குத் திருமணமா? இதோ வந்திட்டேன்,'' என்றார்.நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளினால் உலகிற்கே பெருமை சேர்த்தவர் சொந்த விஷயம் என்று வரும்போது முக்கிய நிகழ்ச்சியான திருமணத்தைக்கூட மறக்க வைத்துவிட்டது.***சிலருக்கு மைக் கிடைத்தா போதும்; மணிக்கணக்கா பேசுவர்... கேட்பவர்களது நிலை மையை எல்லாம் யோசிப்பதே இல்லை. ஒரு சிலருக்கு மைக்கே தேவையில்லை. சட்டைப் பொத்தான் இருந்தால் கூட போதும்; மணிக்கணக்காகப் பேசுவர்... அது என்ன சட்டை பொத்தான் என்று கேட்குறீங்களா?அந்த வகையைச் சேர்ந்தவர்தான் கவிஞர் கோல்ரிட்ஜ். நண்பரின் சட்டைப் பொத்தானைக் கையில் பிடித்துக் கொண்டு நண்பரது முகத்தைப் பார்க்காமல் எதிரிலுள்ள விளக்குத் தூணை நோக்கி தமது பார்வையினைச் செலுத்தியவாறு மணிக்கணக்கில் பேசுவது வழக்கம்.சட்டைப் பொத்தானைப் பிடிக்கக் கொடுப்பவர் தத்துவ மேதை ஜேம்ஸ் டூவர்ட்மில்.ஒரு சமயம் தத்துவ மேதை அவசரமாக ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. கவிஞரோ அவரது சட்டைப் பொத்தானை விடாது பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். மேதையோ மெதுவாக விடுவிக்க முயற்சித்தார். முடியவில்லை. விடுவித்துச் செல்ல என்ன வழியென்று யோசித்தவாறு பாக்கெட்டுக்குள் கையை விட்டார். எப்போதும் தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் சிறிய கத்தியினை எடுத்து எவ்வித அசைவுமின்றி மெதுவாக அறுத்தார். கவிஞரின் கையில் பொத்தான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினார்.தாம் பார்க்க வேண்டிய முக்கிய வேலைகளையெல்லாம் செய்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வந்தார்.அப்போதும் கையிலே பொத்தானைப் பிடித்தவாறே பேசிக் கொண்டிருந்தார் கவிஞர் கோல்ரிட்ஜ். இப்படிப்பட்ட பேச்சாளர்களை நாம் என்னவென்று சொல்வது குட்டீஸ்?

ஆடு மேய்ப்பவனிடம் ஆடுகள் ஒருமுறை சென்று தங்கள் குறையை முறையிட்டன. ""நாங்கள் உங்களுக்குப் பால் தருகிறோம். கம்பளி செய்ய நூல் தருகிறோம். எல்லாம் செய்தும் எங்களை நீங்கள் சரியாகக் கவனிப்பதில்லை. உணவு கூட நாங்களே தான் போய் மேய்ந்து தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், உங்களுக்கு இவை எதுவுமே தராத நாய்களை நீங்கள் ரொம்பத்தான் கொஞ்சுறீங்க. உங்கள் தட்டிலிருந்தே கூட சில சமயம் உணவு கொடுக்கிறீர்கள்... இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல!'' என்று முறையிட்டன.இதைக் கேட்ட வண்ணம் வந்த நாய் ஒன்று, ""நீ சொல்வது சரிதான். ஆனால், நாங்கள் இல்லையென்றால் என்னவாகும்? உங்களைத் திருடர்கள் திருடிக் கொண்டு ஓடுவர். ஓநாய்கள் திருடிக் கொண்டு ஓடும். நீங்கள் பயமின்றி புல் கூடத் தின்ன முடியாது... அதனால்தான் எங்களுக்கு இந்த விசேஷித்த கவனிப்பு!'' என்றது நாய். ஆடுகளும் அதில் இருந்த உண்மையை ஒப்புக் கொண்டு தங்கள் குறையை மறந்தன

Sunday, January 31, 2010

kavithi

காதல் தோல்வியா கலைங்கிட வேண்டாம்? இத்தனை கோடியில் இவள் ஒருத்திய உலகம்? மனதை திறந்து வை பெற்றவள் தவிர மற்றவள் யாவரும் மறுபடியும் பிறப்பால் ? கவிதை இரா-ராஜேந்திரன் / நன்றி நன்றி /


நண்பர்களே
இந்த கவிதையை
படியுங்கள்
இப்படிக்கு
உங்கள்
அன்பு
R-ராஜேந்திரன்
முன்பு கொரக்கவாடி

தற்பொழுது பெரம்பலூர்
நன்றி நன்றி
kavithigal

கவிதிகள்
ராஜேந்திரன்
பெரம்பலூர்
கேம்ப்
சவுதி அரேபியா
ரியாத் சுவெய்தி